Wednesday 7 May 2014

அன்பே ..!
நான் பட்டணத்தில் , பறிதவிக்கிறேன் -
கிராமத்து கிளியே- அங்கு நீ நலமா?

இப்போது அதிகாலை ஐந்து மணி !
காற்றுப் புகமுடியாத தீப்பெட்டி அறைக்குள் உன் நினைவால் ஏங்குகிறேன்..!!

குளித்து முடித்த கூந்தலோடு,

 வாசலில் கோளம் போட
 வந்தவள் -தன்னை மறந்து,
 என் பெயரையெழுதி மகிழ்கிறாய்-சரிதானே ..!!

உன பளிங்கு முகத்தை கண்ணாடியில்

பார்தது - கண்"மை" கொண்டு, 
என் அரும்பு மீசை வரைந்து, 
அழுது , அழுது அழகு பார்க்கிறாய் - சரிதானே ..!!

பட்டணத்து "பவுடர்களுக்கிடையே "

இந்த மஞ்சள் முகத்தின் முகவரியை
தொலைத்து விடுவீர்களோ -என்று 
கவலை தாங்கி இருக்கின்றாய் - சரிதானே..!

அட..!!!
அடைமழையே வந்து மடிமீது
அமர்ந்தாலும் - தாமரைக் கொடி, விரும்புவது
"அடிநீரையல்லாமல்"-
மடி நீரை அல்ல!!!
நாளை விடிவது நமக்காக..!!
நம்பு கண்மணியே ..!!!


-தண்ணீர்மலை. மு 
 

No comments:

Post a Comment